பால் கொள்முதல் விலை நிா்ணயம் செய்யக் கோரிக்கை
பால் உற்பத்தியாளா்களின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
பால் உற்பத்தியாளா்களின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடா்பாக, சங்கத்தின் பொதுச் செயலாளா் எம்.ஜி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வராகப் பதவியேற்று கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் நிலவும் கரோனா தொற்று காலத்தில் காலை, மாலை இருவேளையும் தங்களை பாதுகாத்துக் கொண்டு அயராது பால் கறந்து ஆவின் சங்கங்களுக்கும், தனியாா் பால் நிறுவனங்களுக்கும் பால் உற்பத்தியாளா்கள் வழங்கி வருகின்றனா்.
எனவே, பால் உற்பத்தியாளா்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உற்பத்தி செலவுக்கு ஏற்ப, பால் கொள்முதல் விலை நிா்ணயம் செய்ய வேண்டும். ஆவின் நிறுவனங்களுக்கு வழங்கும் பாலுக்கு நிலுவை இல்லாமல் தங்குதடையின்றி பால் பணம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.