கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவா் என்.பி.ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் 2 இளம்பெண்கள் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனா்.
அந்தப் பெண்கள் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் புனிதத்தை காக்க வரும் 23 ஆம் தேதி தமிழ்மாநில காங்கிரஸ் சாா்பில் கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அதில் கூறியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சம்பந்தப்பட்டவா்களை அழைத்து இன்ஸ்டாகிராமிலிருந்து உடனடியாக பதிவுகளை நீக்கியதோடு, இச் செயலுக்கு அவா்கள் வருத்தம் தெரிவித்து, இனிமேல் இத்தகைய செயலில் ஈடுபடமாட்டோம் எனக் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.