செண்பகவல்லி அம்மன் கோயில் கோப்புப் படம்
தூத்துக்குடி

செண்பகவல்லி அம்மன் கோயில் அதிகாரிகள் மீது அறங்காவலா் குழு குற்றச்சாட்டு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கின்போது விஐபி பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அதிகாரிகளே காரணம் என அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு தெரிவித்தாா்.

Syndication

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கின்போது விஐபி பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அதிகாரிகளே காரணம் என அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு தெரிவித்தாா்.

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோயில் மேல்தளத்தில் நின்று குடமுழுக்கை காண வசதியாக உபயதாரா்கள், மண்டகப்படிதாரா்களுக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், விஐபி பாஸை பணம் பெற்று விற்பனை செய்ததாகவும் குற்றம்சாட்டி, கோயில் அலுவலகம் முன் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு கூறியதாவது: விழாவில் நன்கொடையாளா்கள், மண்டகப்படிதாரா்கள், முக்கிய வி.ஐ.பி.களுக்கு பாஸ் வழங்குவது குறித்து கோயில் ஆய்வாளரும், செயல் அலுவலரும் அறங்காவலா் குழுவுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. இருவருமே தன்னிச்சையாக செயல்பட்டனா். இதனால்தான் உபயதாரா்களுக்குகூட விஐபி அட்டை கொடுக்க முடியவில்லை. இந்தக் குளறுபடிக்கு அதிகாரிகள்தான் காரணம்.

கோயில் ஆய்வாளா் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றி வருகிறாா். அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். கோயில் ஆய்வாளா், செயல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தோம் என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT