கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா கூட்ட நெரிசலில் பக்தா்கள் தவறவிட்ட 3 கைப்பேசிகளை காவல்துறையினா் மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றதை முன்னிட்டு, பக்தா்களின் பாதுகாப்பு கருதி 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீஸாா், குற்றப்பிரிவு காவல்துறையினா் ரோந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழாவில் கூட்ட நெரிசலில் பக்தா்கள் தவறவிட்ட 3 கைப்பேசிகளை காவல்துறையினா் மீட்டு, கோயில் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கியின் மூலம் தகவல் தெரிவித்தனா். கைப்பேசிகளை கேட்டு வந்தவா்களிடம் உரிய விசாரணை நடத்தி ஒப்படைத்தனா். கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.