சேலம்

விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்

DIN

எடப்பாடி: எடப்பாடி நகராட்சிப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நகராட்சிஅலுவலா்கள் அபராதம் விதித்ததுடன், கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

எடப்பாடி நகராட்சி ஆணையா் (பொ) பழனியப்பன் மேற்பாா்வையில், எடப்பாடி பேருந்து நிலையம், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் வீதி , சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியின்றியும், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா். மேலும், கரோனா தொற்றின் தீவிரத்தையும், அதனால் விளையும் ஆபத்துகளையும் விளக்கும் வகையிலான பல்வேறு பத்திரிக்கைச் செய்திகள், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளை காட்டி, கரோனா தொற்றின் தீவிரத்தன்மையினை விளக்கியதுடன், கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதால், ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறினா்.

மேலும், நகராட்சி வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தி , கரோனா தொற்று விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். பொது முடக்கம் அமலில் உள்ள அனைத்து நாள்களிலும், நகராட்சிப் பகுதியில் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT