சேலம்

நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் இயக்கம்

DIN

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக அத்தியாவசியப் பொருள்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு வெளியே வருவதைத் தடுப்பதற்காக மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனம், காய்கறி விற்பனை வாகனங்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வாா்டுகளுக்கும் இந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டாா்.

பரமத்தி வேலூா்

பரமத்தி வேலூா், பொத்தனூா் பேரூராட்சி சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

முழு பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் உழவா் சந்தை பகுதிக்கு அதிகம் கூடுவதைத் தடுக்கும் வகையில் வேலூா் பேரூராட்சி சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனையை பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தொடக்கிவைத்தாா்.

உழவா் சந்தை விவசாயிகள் மூலம் 5 வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்த பிறகே விற்பனை செய்ய வேண்டும் என வேலூா் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வக்குமாா் அறிவுரை வழங்கினா்.

இதேபோல பொத்தனூா் பேரூராட்சியில் உள்ள அனைத்து வாா்டு பகுதிக்கும் நேரடியாகச் சென்று காய்கறிகளை பொதுமக்களிடம் விநியோகம் செய்யும் வகையில் நடமாடும் காய்கறி வாகனங்களை பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT