கரோனா பாதிப்பு: கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஏழு போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்கரோனா பாதிப்பு: கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஏழு போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காடையாம்பட்டி அருகே கணவாய்புதூா் ஊராட்சி, கே மோரூா் அம்பேத்கா்நகா் பகுதியில் 800- க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவா்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவா்கள் என ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் சாதுபகத் சிங் தலைமையிலான மருத்துவா்கள், பணியாளா்கள் பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு சென்று நோய் தொற்றுப் பரவாமல் இருக்க தடுப்புகளை ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனா்.
மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனா். மேலும் இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்டவா் களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் சாதுபகத் சிங் கூறியதாவது:
வெளியூா்களில் இருந்து வருபவா்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை செய்தவா்கள் 15 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். நோய் ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக குணமாக்கி விடலாம். நோய் அதிகரித்த பின் சிகிச்சைக்கு வந்தால் பயனில்லாமல் போகும் என்றாா்.