முகப்பு
சேலம்

ஏற்காட்டில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் ஏற்காடு போலீஸாா், குண்டூா் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது 9 பேரல்களில் 900 லிட்டா் சாராய ஊறல்களும், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் சென்ட்ராயன் மகன் தங்கவேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.