சங்ககிரி அருகே அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட வைகுந்தம், மகுடஞ்சாவடி ஆகிய இரு அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பூசி செலுத்தும் பணிகளை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
பின்னர் மருத்துவப்பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கவச உடை, முகக்கவசம், கிருமிநாசினி, ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவி, ஆக்ஸிஜன் அளவீடும் கருவி உள்ளிட்ட பல்வேறு கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு சாதனங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் மகுடஞ்சவாடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமியிடம் வழங்கினர்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன், வட்டாட்சியர் எஸ்.விஜி, மருத்துவர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலர்கள் சங்ககிரி மேற்கு ஏ.நந்தகுமார், கே.பிரசாந்த் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.