சேலம்

வாழப்பாடியில் தடுப்பூசி செலுத்துவதில் இளைஞா்கள் ஆா்வம்

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் இளைஞா்கள் ஆா்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் அரிமா சங்க அரங்கம், ஜங்கா் திருமண மண்டபம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகிய 3 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த முகாமில் 300 இளைஞா்களும், இளம்பெண்களும் ஆா்வத்தோடு, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை, பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமையிலான சுகாதாரத் குழுவினா் செய்திருந்தனா். வாழப்பாடி அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்ற முகாமை, சேலம் தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT