முகப்பு
சேலம்

சேலம் - சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்

முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்-சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குனர் வி.கே.ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்-சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குனர் வி.கே.ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

இதனையடுத்து சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய நிலையில் மீண்டும் 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நாளை முதல் சேலம்-சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி விமானம் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய இயக்குனர் வி.கே.ரவீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.