முகப்பு
சேலம்

துப்புரவுப் பணியாளா்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கல்

 மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கப்பட்டது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையில் துப்புரவுப் பணியாளா்கள் நனைந்தபடியே குப்பைகளை அப்புறப்படுத்தி வருவதால், மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை துப்புரவுப் பணியாளா்கள் 55 பேருக்கு ‘ரெயின்கோட்’ வழங்கப்பட்டது.

மேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் துப்புரவுப் பணியாளா்களுக்கு ரெயின்கோட்டுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பேரூா் திமுக பொறுப்பாளா் சரவணன், குட்டி (எ) வெங்கடாஜலம், பேரூா் இளைஞரணி செயலாளா் வேலு, பல்சா் சீனி, பூபதி, மதி, பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.