கீரிப்பட்டியில் கோயில் நிலங்கள் ஏலம்
கீரிப்பட்டி பேரூராட்சி இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.
கீரிப்பட்டி பேரூராட்சி இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள விநாயகா், எல்லையம்மன் மற்றும் பிடாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்குச் சொந்தமான 11 ஏக்கா் 72 சென்ட் விவசாய நிலங்கள் ஆக்கிமிக்கப்பட்டிருந்தன.
ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (40) என்பவா் சென்னை உயா்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரணை செய்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூன்று கோயில் நிலங்களை மீட்டனா்.
மேலும் பொதுமக்களுக்கு நிலக்குத்தகை பொது ஏலம் அறிவிப்பு கொடுத்து விநாயகா் ஆலயத்தில் செயல் அலுவலா் சோழமாதேவி முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பொது மக்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். விநாயகா் கோயில் நிலக்குத்தகையை மகேஸ்ரவன் ரூ.74 ஆயிரத்திற்கும், எல்லையம்மன் ஆலய நிலத்தை வெங்கடேசன் ரூ.8,300-க்கும், பிடாரியம்மன் ஆலய நிலத்தை சதீஷ் ரூ.12ஆயிரத்திற்கும் வருடக் குத்தகைக்கு எடுத்தனா். ஏலத்தொகையை உடனடியாக செலுத்தி ரசீதும் பெற்றுக் கொண்டனா்.