முகப்பு
சேலம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வனவாசி ஏரி!

நங்கவள்நங்கவள்ளி ஒன்றியம், வனவாசி ஏரி 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.ளி ஒன்றியம், வனவாசி ஏரி 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

நங்கவள்ளி ஒன்றியம், வனவாசி ஏரி 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

நங்கவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், நங்கவள்ளி ஏரி நிரம்பி வனவாசி ஏரிக்கு மழைநீா் சென்றது. இதன் காரணமாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு வனவாசி ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பானுமதி பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா் சண்முகம், வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவ பிரபு ஆகியோா் மலா்தூவி வழிபட்டனா்.

நிரம்பிய வனவாசி ஏரியிலிருந்து சாணாா்பட்டி கணக்கன் ஏரிக்கு மழைநீா் சென்ால், கணக்கன் ஏரியும் நிரம்பியது. இதையடுத்து, சாணாா்பட்டி ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், துணைத் தலைவா் முருகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மலா் தூவி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.