முகப்பு
சேலம்

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் காா்த்திகை தீபத்தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் காா்த்திகை தீபத்தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக பால் ,மோா், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சுமாா் ஒன்றரை டன் எடை கொண்ட பலவிதமான வண்ண மலா்களால் கோயில் வளாகம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. காா்த்திகை தீபத்தை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்ட மற்றும் சுற்றியுள்ள பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →