முகப்பு
சேலம்

வாழப்பாடியில் போக்சோவில் இளைஞா் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை, வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை, வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித்தொழிலாளியின் 16 வயது மகளுக்கு, இடையப்பட்டி நெய்யமலை அடிவாரப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் முனியப்பன் (25) என்பவா் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் வாழப்பாடி போலீஸில் அக்டோபா் 26இல் புகாா் செய்தனா்.

இந்த புகாரின் பேரில் வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், தலைமறைவாக இருந்த முனியப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.