முகப்பு
சேலம்

வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது தமிழக முதல்வருக்குக் கிடைத்த வெற்றி: அமைச்சா் கே.என்.நேரு

 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது தமிழக முதல்வருக்குக் கிடைத்த வெற்றியாகும் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது தமிழக முதல்வருக்குக் கிடைத்த வெற்றியாகும் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி அறிவிக்கை விடுத்தாா். பின்னா் தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீா்மானமும் நிறைவேற்றினாா். தமிழக முதல்வா், விவசாயிகளின் கோரிக்கை வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாகும். விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். காவல்துறை சாா்பில் பெரும் நெருக்கடி தரப்பட்டது. தில்லியில் அவா்களை அனுமதிக்காமல் சாலைகளை அடைத்து தடுத்து நிறுத்தினா்.

வேலாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது விவசாயிகளின் கடந்த ஓராண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். வேளாண் சட்டத்தை நிறைவேற்ற அதிமுக அரசு துணையாக இருந்தது என்றாா்.

‘மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி’

இதைத்தொடா்ந்து வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல் குரல் கொடுத்தது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்தான். அதேபோலதோ்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என அறிவித்தாா். அதேபோல விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவிப்போம் என்றாா். பின்னா் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவித்தாா். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வந்தாா்.

தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆவாா். அவரது குரல் நாடு முழுவதும் ஒலித்தது. விவசாயிகளின் தொடா் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது மத்திய அரசிற்கு ஏற்பட்ட தோல்வியாகும். விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக மாறிவிட்டாா்கள் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →