சேலம்

சேலம் கோட்டத்தில் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் குறைப்பு

DIN

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதிக் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்கும் வகையில் நடைமேடை அனுமதிச்சீட்டு கட்டணம் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டது. இதனிடையே, கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததால் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை அனுமதிச்சீட்டு கட்டணம் ரூ. 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண குறைப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. அதேவேளையில் ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT