சேலம்

தம்மம்பட்டி திருமண் கரடில் 10-வது நாளாக எரியும் கார்த்திகை தீபம்

DIN


தம்மம்பட்டி: தம்மம்பட்டி திருமண் கரடு மலையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் 10 நாள்களாக கார்த்திகை தீபம் எரிந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி திருமண் கரடு மலையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. மலை உச்சியில் கோவிலுக்கு அருகே பிரமாண்ட கொப்பரையில் கார்த்திகை தீபம் கடந்த 19-ந் தேதி ஏற்றப்பட்டது. வழக்கமாக, இந்த தீபம் ,தொடர்ந்து 5 நாள்கள் எரிந்தபடி இருக்கும். அதன் பிறகு தீபம் அணைந்துவிடும்.

இந்நிலையில், தீபம் ஏற்றப்பட்ட 10-வது நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கொப்பரையை அகற்ற, தீபக் குழுவினர் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது, கொப்பரையிலிருந்து தீபம் கொழுந்து விட்டு எரிந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். 

இதுகுறித்து கார்த்திகை தீபக் குழு நிர்வாகிகள் திருச்செல்வன், பி.வி. செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:  

"கொப்பரையினுள் நெய், எண்ணெய் நிறைத்தப் பின், மேல்புறம், ஒரு பெரிய மண் பானையை கவிழ்த்த நிலையில் வைப்போம். 10-வது நாளில் பானையை அகற்றியபோது, தீபம் , பிரகாசமாக எரிந்தது ஆச்சரியமாக உள்ளது. அதனால் எரியும், தீபக் கொப்பரையை அப்படியே இருக்க விட்டு விட்டோம்" என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT