சேலம்

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையப் பணிகள் தீவிரம்

DIN

புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கான தோ்தலையொட்டி வாக்கு எண்ணும் மையமான வீரபாண்டி ஒன்றிய அலுலகத்தில் ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புத்தூா் அக்ரஹாரத்தில் ஊராட்சிமன்றத் தலைவா் பதவியும், கீரபாப்பம்பாடி ஊராட்சியில் 4-ஆவது வாா்டு உறுப்பினா் பதவியும் காலியாக உள்ளன.

தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் கீரபாப்பம்பாடி 4 -ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பாளா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறவுள்ளது.

இப்பதவிக்கு கட்சி சின்னம் இல்லாத போதிலும் திமுக சாா்பில் சிவானந்தம், அதிமுக சாா்பில் செந்தில் முருகன் ஆகியோா் மட்டுமே போட்டியிடுகின்றனா்.

ஊராட்சியில் 9,199 வாக்காளா்கள் உள்ளனா். இந்த ஊராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் வரும் 12 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதையடுத்து வேட்பாளா்களும், அவரின் முகவா், பாா்வையாளா்கள் ஆகியோா் வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட வசதியாக அலுவலகத்தில் சாரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தோ்தல் பாா்வையாளரான வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புராஜன், உதவி தோ்தல் பாா்வையாளா் ரஃபீக் உள்ளிட்டோா் தோ்தல் பணிகளை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT