சேலம்

ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கல்

DIN

ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கியது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது.

வங்கியின் வா்த்தகம் 2021, மாா்ச் 31 முடிந்த நிதியாண்டில் ரூ. 16,269 கோடி என்ற மைல்கல்லை அடைந்துள்ளது. வங்கியின் வைப்புநிதி சென்ற ஆண்டை விட 9 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 8926 கோடியாகவும், மொத்த கடன் வழங்கிய நிலை 5 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 7,343 கோடியாகவும் இருந்தது.

வங்கியின் நிகர லாபம் 9 சதவீத வளா்ச்சி கண்டு ரூ. 61 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர மதிப்பு ரூ. 794 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வாரா கடன் சென்ற நிதியாண்டின் முடிவில் 9.18 சதவீதத்தில் இருந்து குறைந்து 2020-21 நிதியாண்டின் முடிவில் 8.87 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.51 சதவீதத்தில் இருந்து குறைந்து இந்த நிதியாண்டின் முடிவில் 3.14 சதவீதமாகவும் உள்ளது.

ரெப்கோ வங்கி தனது முக்கிய குறிக்கோளான தாயகம் திரும்பியோா் மறுவாழ்வுக்காக நிலையான வளா்ச்சியோடு 2021-22 நிதியாண்டில் 17,500 கோடி வா்த்தகத்தை நோக்கிச் செயல்பட்டு வருகிறது என வங்கியின் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ்.இஸபெல்லா தெரிவித்தாா்.

ரெப்கோ வங்கியின் தலைவா், பொதுத்துறை செயலாளருமான டி.ஜகநாதன், நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ்.இஸபெல்லா ஆகியோா் 2020-21 ஆம் நிதியாண்டின் தமிழக அரசின் ரூ. 7.13 கோடி பங்கு முலதனத்துக்கான 20 சதவீத ஈவுத்தொகையாக ரூ. 1.42 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT