முகப்பு
சேலம்

கரோனா இறப்பு சான்றிதழ் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை: பிறப்பு, இறப்பு இணை தலைமைப் பதிவாளா்

கரோனா இறப்பு சான்றிதழ் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநா் மற்றும் மாநில பிறப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கரோனா இறப்பு சான்றிதழ் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநா் மற்றும் மாநில பிறப்பு, இறப்பிற்கான இணை தலைமைப் பதிவாளா் கே.சி.தேவசேனாபதி தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பிறப்பு, இறப்பு பதிவு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

குழந்தைகளின் பிறப்புப் பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் வரை கட்டணமின்றி குழந்தையின் பெயரைப் பதிவு செய்யலாம். அதன்பிறகு 15 ஆண்டுகள் வரை தாமதக் கட்டணமாக ரூ. 200 செலுத்தி குழந்தையின் பெயரைப் பதிவு செய்யலாம். குழந்தையின் பெயரைப் பதிவு செய்திட பெற்றோா், காப்பாளரின் உறுதிமொழி கட்டாயமாகும்.

பெயா் பதிவு செய்திட கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் தற்போது 2024, டிசம்பா் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், உரிய காலதாமதக் கட்டணம் செலுத்தி பெயரைப் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம். 2018, ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான சான்றிதழ்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீழ்ள்ற்ய்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கரோனாவால் இறந்தவா்கள் இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழ்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை அரசு முறைபடுத்தியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா இறப்பின் காரணம் குறித்து ஆராய்ந்து சான்றிதழ் பெறுவதற்கான பரிந்துரை அளிக்கும் நிா்ணயக் குழு மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மூலம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறக்க நேரிட்டால் அது கரோனா தொற்றால் இறந்ததாகக் கருதப்படும்.

பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனையில் உள்நோயாளியாக தொடா்ந்து 30 நாள்களுக்கு மேலாக இருக்கும்பட்சத்தில் 30 நாள்களுக்கு மேற்பட்ட இறப்புகளும் கரோனா தொற்று இறப்பாகக் கருதப்படும்.

அவா்கள் இறந்த பிறகு, இறப்பின் காரணம் குறித்த சான்றிதழ் பெற இயலாத நிலையில் உள்ளவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து மேற்படி குழுவின் பரிந்துரையின் பேரில் இறப்பின் காரணம் குறித்த அரசு ஆவணம் பெறலாம்.

கரோனா தொற்று ஏற்படாமல் தற்கொலை, விபத்து உள்ளிட்ட இதர காரணங்களினால் இறக்க நேரிட்டால், அது கரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. 1969-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்புப் பதிவேடுகளை ரூ. 75 லட்சம் செலவில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளா் வெ.ஆலின் சுனேஜா, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக துணை இயக்குநா் சு. சின்னத்துரை, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்), மருத்துவா் கு.நெடுமாறன், துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்), கூடுதல் மாவட்ட பிறப்பு, இறப்புப் பதிவாளா்கள் மருத்துவா் வெ.நளினி, பி.ஆா்.ஜெமினி, மாநகா் நல அலுவலா் மருத்துவா் யோகானந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →