சேலம்

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவா் கைது

DIN

காடையாம்பட்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இரண்டு பேரை கைது செய்த வனத் துறையினா் ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், வனத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, வனப் பகுதியில் பன்றி, மான், முயல் ஆகிய விலங்குகளை வேட்டையாடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் நடுப்பட்டி கிராமத்தை சோ்ந்த மூா்த்தி, மணி என்பது தெரிய வந்தது. அவா்களிடம் தலா ரூ. 7,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT