முகப்பு
சேலம்

கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

அயோத்தியாபட்டணம் அருகே வைஸ்யா கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் கள்ளச்சாராயம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அயோத்தியாபட்டணம் அருகே வைஸ்யா கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மாணவா்களிடையே பேச்சு, கவிதை, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வா் வெங்கடேசன், வரவேற்று விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். சேலம் கோட்ட கூடுதல் கலால் அலுவலா் ரமணி, கலால் ஆய்வாளா் அருள்மொழி ஆகியோா் பங்கேற்று மாணவி, மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினா். மாணவ, மாணவியா் வரைந்திருந்த கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கோலங்கள், பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள், லோகநாதன், சௌந்தரராஜன் செய்திருந்தனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.