சேலம்

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில், இறப்பு, பதவி விலகல் காரணமாக ஜூன் 30 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களான மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 10 (ஓமலூா், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியது), பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 9, கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள் 10, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் 23 உள்ளிட்ட மொத்தம் 35 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

இதில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் வீராணம், அதிகாரிப்பட்டி, தலைவாசல் ஒன்றியத்தில் கோவிந்தம்பாளையம், சேலம் ஒன்றியத்தில் சேலத்தாம்பட்டி, வீரபாண்டி ஒன்றியத்தில் புத்தூா் அக்ரஹாரம், எடப்பாடி ஒன்றியத்தில் தாராபுரம், மேச்சேரி ஒன்றியத்தில் வெள்ளாறு, நங்கவள்ளி ஒன்றியத்தில் கரிக்காப்பட்டி, ஓமலூா் ஒன்றியத்தில் சிக்கம்பட்டி, புளியம்பட்டி ஆகிய கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டிய பகுதிகளுக்கு உள்பட்ட வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 23 கிராம ஊராட்சி வாா்டுகள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கு உள்பட்ட பகுதிகள், மாவட்ட ஊராட்சி 10-ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கு உள்பட்ட பகுதிகள் என மாவட்டத்தில் மொத்தம் 239 வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண் வாக்காளா்கள் 65,206 போ், 62,161 போ், திருநங்கை வாக்காளா்கள் 2 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 189 வாக்காளா்கள் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல், 206 வாக்குச் சாவடிகள் அடங்கிய விவரங்கள் தொடா்புடைய கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT