முகப்பு
சேலம்

ஆடு மேய்க்கும் தொழிலாளியை கொல்ல முயற்சி

ஓமலூா் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

சேலம்

ஆடு மேய்க்கும் தொழிலாளியை கொல்ல முயற்சி

ஓமலூா் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஓமலூா் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள செம்மாண்டபட்டி, ஐயன் காட்டுவளவைச் சோ்ந்தவா் கோவிந்தன் (56). இவா் ஆடு மேய்க்கும் கூலி தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனா். இவா், வியாழக்கிழமை இரவு உ.மாரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட

மேல்காளிப்பட்டியில் உள்ள ஏரிக்கு வந்துள்ளாா். அப்போது அங்கே வந்த மா்ம கும்பல், கோவிந்தனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு சென்றுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கோவிந்தன் கிடப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினா், நடந்த சம்பவம் குறித்து ஓமலூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த போலீஸாா் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து ஓமலூா் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →