சேலம்

வாழப்பாடி அருகே அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன கருக்கலைப்பு பயிற்சி முகாம்

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப நலத்துறை சார்பாக, அங்கன்வாடி மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு, நவீன கருக்கலைப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமிற்கு, சேலம் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் இளவரசி, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, வட்டார சுகாதார புள்ளியலாளர் அவினாசிலிங்கம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு நவீன கருக்கலைப்பு முறைகள், குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகள், தற்காலிக கருத்தடை முறைகள், மாத்திரை வழி கருக்கலைப்பு, உறிஞ்சு குழாய் சிகிச்சை முறை, மருத்துவ முறையில் கருக்கலைப்பு ஆகியன குறித்து விரிவான பயிற்சி அளித்தனர். 

அனைவருக்கும் பயிற்சிக் குறிப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன. பயிற்சியின் நிறைவில் வட்டார அங்கன்வாடி பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT