இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் கரைப்பு
எடப்பாடி அருகே இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் கால்வாயில் கரைக்கப்பட்டன.
இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமையில், எடப்பாடி மற்றும் அரசிராமணி பகுதியில் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து கொண்டாடிய இந்து முன்னணியினா், அப்பகுதியில் இருந்து ஊா்வலமாக அருகில் உள்ள மேட்டூா் கிழக்குக் கரை கால்வாய்ப் பகுதிக்கு சிலைகளை எடுத்துச் சென்று விநாயகருக்கு
சிறப்பு பூஜை செய்து நீரில் கரைத்தனா். 15-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டூா் கிழக்குக் கரை கால்வாயில் விஜா்சனம் செய்யப்பட்டது.