முகப்பு
சேலம்

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி பாஜக மனு

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம், சேலம் மேற்கு மாவட்ட பாஜக பாா்வையாளா் ஆா்.பி.கோபிநாத் அளித்துள்ள மனு விவரம்:

பொது போக்குவரத்து தொடா்ந்து செயல்பட்டு வரும் நிலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ரயில் சேவை சில வழித்தடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்க வேண்டும். சேலம் ரயில்வே கோட்டம் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகின்றன.

சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும். அதேபோல கோயில் நகரமான தஞ்சாவூா், கும்பகோணம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →