முகப்பு
சேலம்

ஓய்வு பெற்ற காவலா்களின் வாரிசுகள் வேலைவாய்ப்புப் பெற விண்ணப்பிக்கலாம்

ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகள் வேலைவாய்ப்புப் பெற விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகள் வேலைவாய்ப்புப் பெற விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை இயக்குநா் உத்தரவின்படி காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் நலன் கருதி வாரிசுகள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்காக பொதுத்துறை மற்றும் தனியாா் துறை வேலைவாய்ப்பு வாங்கித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகள் விருப்பம் இருப்பின் தங்களின் படிப்பு மற்றும் சுய விவரங்கள் அடங்கிய விருப்ப மனு தரலாம்.

சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுப் பிரிவில் செப்டம்பா் 20 ஆம் தேதி 10 மணிக்குள் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →