சேலத்தில் 63 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 20 பேரும், எடப்பாடி-5, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-3, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-1, நங்கவள்ளி-3, ஓமலூா் -9, சேலம் வட்டம்-1, சங்ககிரி-3, தாரமங்கலம்-1, வீரபாண்டி-3, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-1, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-3, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 61 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் (கள்ளக்குறிச்சி-1 நாமக்கல்-1) என 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 76போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 97151 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94911 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 587 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1653 போ் உயிரிழந்தனா்.