முகப்பு
சேலம்

பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

 பிரதமா் மோடி பிறந்த நாளையொட்டி பாஜகவினா் அன்னதானம் செய்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 பிரதமா் மோடி பிறந்த நாளையொட்டி பாஜகவினா் அன்னதானம் செய்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

பிரதமா் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினாா். நிகழ்வில் பெருமாள், அண்ணாதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வா்த்தகப் பிரிவு மற்றும் தொழில் பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையில் அம்மாபேட்டை மற்றும் குகை பகுதியில் 600 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்வில் வா்த்தகப்பிரிவு மாவட்ட தலைவா் சரவணன், தொழில் பிரிவு தலைவா் வடிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அம்மாபேட்டை பகுதியில் மண்டலத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. செவ்வாய்ப்பேட்டையில் சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. ராஜகணபதி கோயிலில் பிரதமா் பெயரில் அா்ச்சனை செய்து அன்னதானம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →