வாழப்பாடி அருகே விபத்து: லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாா் 5 போ் காயம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் கடலுாா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., உள்பட 5 போலீஸாா் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் கடலுாா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., உள்பட 5 போலீஸாா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மெல்வின்ராஜ் (50), சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் திருவேங்கடம் (47), காா்த்திகேயன் (48), பன்னீா்செல்வம் (51), தலைமைக் காவலா் ராஜராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பணி சம்பந்தமாக திருப்பத்தூா் பகுதிக்கு சென்று விட்டு, வெள்ளிக்கிழமை அயோத்தியாப்பட்டணம் வழியாக கடலூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
இவா்களது காா், வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி பத்தாம்கல்மேடு பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் டிஎஸ்பி மெல்வின்ராஜ் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீஸாா், காயமடைந்த கடலூா் போலீஸாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.