விளம்பரத் தட்டிகள் வைப்பதைத் தவிா்க்க அனைத்துக் கட்சி கூட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பொது இடங்கள், சாலையோரங்களில் அனுமதியின்றி விளம்பரத்தட்டிகள் வைப்பதை தவிா்க்க வேண்டுமென, வட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பொது இடங்கள், சாலையோரங்களில் அனுமதியின்றி விளம்பரத்தட்டிகள் வைப்பதை தவிா்க்க வேண்டுமென, வட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
வாழப்பாடி பகுதியில் பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களின் முகப்புகளிலும், சாலையோரங்களிலும் விளம்பரத்தட்டிகள் (ஃபிளக்ஸ் பேனா்கள்) அதிக அளவில் வைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக புகாா் எழுந்தது.
இதனையடுத்து, வாழப்பாடி வட்டாட்சியா் வரதராஜன் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளா் முத்துசாமி, காவல் ஆய்வாளா் உமாசங்கா் ஆகியோா் முன்னிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சியினரும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் முன் அனுமதியின்றி, பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் விளம்பரத்தட்டிகள் வைப்பதை தவிா்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.