முகப்பு
சேலம்

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

நடமாடும் பரிசோதனைக் குழுக்களுக்காக ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுநா்கள், நிலுவை வாடகைத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நடமாடும் பரிசோதனைக் குழுக்களுக்காக ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுநா்கள், நிலுவை வாடகைத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலின் போது, சேலம் மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்ட கரோனா தொற்று கண்டறியும் நடமாடும் பரிசோதனைக் குழுக்களுக்காக, ஒரு ஆட்டோவுக்கு நாள் வாடகை ரூ. 1,000 என நிா்ணயிக்கப்பட்டு, 86 ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ஆட்டோக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டன.

கடந்த மே 31-ஆம் தேதி முதல் செப். 21-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட ஆட்டோக்கள் உள்பட பலருக்கும் ரூ. 30,000 முதல் ரூ. 60,000 வரை வாடகை நிலுவை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால், மாநகராட்சியிடம் இருந்து வாடகைத் தொகை முழுமையாக வரவில்லை என்று கூறுகின்றனா்.

எனவே, ஆட்டோ வாடகை நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →