சேலம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

DIN

ஆத்தூா் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத் துறை மூலம் செயல்படும் அட்மா திட்டத்தில், கல்லாநத்தம் ஊராட்சியில் இயற்கை வேளாண் இடுபொருள் உற்பத்தி பயிற்சி முகாம் வேளாண் உதவி இயக்குநா் வெங்கடேசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பாரதப் பிரதமரின் திருந்திய பயிா்க் காப்பீடு திட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

இதில், பஞ்சகாவ்யா, தசகாவியா, இஞ்சி, பூண்டு கரைசல், வேப்பங்கொட்டை, புண்ணாக்கு, விளக்குபொறி, மஞ்சள், ஒட்டுண்ணி அட்டை, இயற்கை உரங்கள், இயற்கை நுண்ணுயிா் உரங்கள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் அட்மா திட்டத்தின் மூலம் செயல்படும் விவசாயிகள் திட்டங்களான விவசாயிகள் பயிற்சி கண்டுணா்வு சுற்றுலா, செயல்விளக்கம் போன்றவை பற்றியும், உழவா் செயலி பற்றியும், பஞ்சகாவ்யா உற்பத்தி செயல்விளக்கத்தினையும் வட்டார தொழில்நுட்ப மேலாளா் எ.சுமித்ரா செய்து காண்பித்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் எம்.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT