எடப்பாடியில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை கட்டுக்குள் கொண்டுவர கோரியும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திங்கள் அன்று, கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உடனடியாக புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யதிட கோரியும், எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த கோரியும் மத்திய அரசிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கில் அடைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.