சேலம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

சங்ககிரி: சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஒவ்வோா் ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெறுகிறது. கரோனா தீநுண்மி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தோ்த் திருவிழா நடைபெறவில்லை.

இதனையடுத்து நிகழாண்டு தோ்த் திருவிழா நடத்துவதற்காக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்ககிரி திமுக ஒன்றிய பொறுப்பாளரும், விழாக் குழு தலைவருமான கே.எம்.ராஜேஷ் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கஸ்தூரி, ஊா் பட்டக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் வரும் மே 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளுதல், மே 14இல் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல், மே 24இல் மலைக்கு எழுந்தருளுதல் வைபவம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT