கோப்புப்படம் 
சேலம்

தம்மம்பட்டியில் போக்சோ வழக்கில் பெயிண்டர் கைது

தம்மம்பட்டியில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் பெயிண்டரை, காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் பெயிண்டரை, காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

தம்மம்பட்டி காந்திநகரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலம் குன்றியது. சிறுமியின் பெற்றோர், அவரை மருவத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில் காந்திநகரைச் சேர்ந்த ஞானசேகரின் மகன் தர்மராஜ் (28) என்பவர், தன்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார் என்பதை கூறினார். தர்மராஜ், கோவில் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டராக உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய், தம்மம்பட்டி காவல்துறையினரிடம் தர்மராஜ் குறித்து புகார் அளித்தார். தம்மம்பட்டி காவல்துறையினர், தர்மராஜிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, நடைபெற்ற விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்ததை தர்மராஜ் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை போக்சோ வழக்கில், காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

SCROLL FOR NEXT