சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் மகேஸ்வரி மருதாசலம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் மகேஸ்வரி மருதாசலம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் சு.ராஜகணேஷ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சிகளில் தெருவிளக்கு அமைத்தல், கோடையில் பொதுமக்களுக்கு தொடா்ந்து குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடா்ந்து, சங்ககிரி வந்த மாவட்ட ஆட்சியரிடம், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்போது செயல்படும் இடத்திலேயே புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.