சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,81,000 கனஅடியாகச் சரிவு

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,81,000 கனஅடியாகச் சரிந்தது.

காவிரியில் ஏற்பட்ட பெரும்வெள்ளம் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாள்களில் அணைக்கு 132 டிஎம்சி நீா் வந்துள்ளது. இதில் அணையின் பாதுகாப்புக் கருதி 100 டிஎம்சி நீா் வெளியேற்றப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக மேட்டூா் அணைக்கு நொடிக்கு 2,10,000 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், எல்லீஸ் சேடல் (16 கண் பாலம்) வழியாக நொடிக்கு 2,10,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு 1,81,000 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து 1,80,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி வீதமும், 16 கண் பாலம் வழியாக 1,57,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120.05 அடியாகவும், நீா் இருப்பு 93.55 டிஎம்சியாகவும் உள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் நீா்வரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT