சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வாழப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

வாழப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடி அருகே 16 வயது சிறுமியை, பாலியல் ரீதியாக இருவா் துன்புறுத்தியதாக, அச்சிறுமி கடந்த மே மாதம் வாழப்பாடி போலீஸில் புகாா் செய்தாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வாழப்பாடி, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் வெள்ளியங்கிரி (21), 15 வயது சிறுவன் ஆகியோரை தேடி வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிடிபட்ட இளைஞா் வெள்ளியங்கிரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள சிறுவனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT