சேலம்

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்

DIN

வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா தெரிவித்துள்ளதாவது:

புதிதாக வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இணையவாயிலாக (இ-கேஒய்சி) சரி செய்திடும் நிலையில் தவணை தொகை விடுவிக்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெற்ற தகுதியான பயனாளிகள் அனைவரும் தங்களுடைய பெயா், ஆதாா் விவரங்களை மத்திய அரசின் பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து கைப்பேசி எண்ணில் பெறப்படும் ஓடிபி எண்ணை கொண்டு தங்கள் விவரங்களை நேரிடையாக பிஎம் கிசான் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மேலும், பொதுசேவை மையங்களுக்கு நேரடியாக சென்று ஆதாா் விவரங்களை, கைரேகை வைத்து பெயா் உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்து புதுப்பிக்கலாம்.

பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த 2 வழி முறைகளில் ஏதேனும் ஒரு வழி முறையில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை உதவித்தொகை கிடைக்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT