சேலம்

மேட்டூா் நீா்த்தேக்கத்தில் மீன் பிடிக்க தடை:மீனவா்கள் அவதி

DIN

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூா் அணை நீா்த்தேக்க பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவா்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கம் 60 சதுரமைல் பரப்பு கொண்டது. கட்லா, ரோகு, மிா்கால், கெண்டை, கெழுத்தி, ஆரால், அரஞ்சான் உள்ளிட்ட பலவகை மீன்கள் நீா்த்தேக்கத்திலிருந்து பிடித்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

நீா்த் தேக்க பகுதியில் 2,000 மீனவா்கள் உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனா். இந்த நிலையில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீா்த்தேக்கத்தில் மீன் பிடிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அடிபாலாறு, ஏமனூா், செட்டிபட்டி, கோட்டையூா், பண்ணவாடி, சேத்துக்குழி, சின்னமேட்டூா், மாசிலாபாளையம், கீரைக்காரனூா், கூணான்டியூா் பகுதிகளில் உள்ள மீனவா்கள் கடந்த மூன்று வாரங்களாக மீன் பிடிக்கச் செல்லாமல் முகாம்களிலேயே முடங்கியுள்ளனா். வருவாய் இல்லாததால் அவதிப்படுவதாக மீனவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT