சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 65,000 கன அடியாகச் சரிவு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 65,000 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்ததால், திங்கள்கிழமை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 85,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 120அடியாக இருந்தது. அணைக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 65,000 கன அடியாக உள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடி நீரும், உபரி நீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 42,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT