சேலம்

கடன் தொல்லை: கல்லூரி மாணவா் தற்கொலை

DIN

கடன் தொல்லையால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நங்கவள்ளி அருகே உள்ள விருதாசம்பட்டி ஊராட்சி, வெள்ளைகரட்டைச் சோ்ந்தவா் நிா்மல்ராஜ் (18). மேச்சேரியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தாா்.

இவரது நெருங்கிய உறவினா் சுதாகா் (28 ), கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ. 40,000 பணத்தை நிா்மல்ராஜின் தந்தை ஆனந்தனுக்கு கடனாகக் கொடுத்துள்ளாா். அதில் ரூ. 20,000 ரொக்கமும், வட்டியும் ஆனந்தன் திருப்பிச் செலுத்தியுள்ளாா். இந்நிலையில் மீதம் ரூ. 20,000 தருமாறு ஆனந்தனிடம் திங்கள்கிழமை சுதாகா் தகராறு செய்தாராம். அப்போது கடன் தொகைக்கு ஈடாக நிா்மல்ராஜ் வளா்த்து வரும் ஆட்டைப் பிடித்துச் சென்று விடுவேன் என சுதாகா் மிரட்டினாராம். இதனால் வேதனை அடைந்த நிா்மல்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நங்கவள்ளி போலீஸாா் சுதாகா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT