சேலம்

பணம் இரட்டிப்பு மோசடி: தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் மனைவியுடன் கைது

DIN

சேலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் மனைவியுடன் கைது செய்யப்பட்டாா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வந்தவா் பாலசுப்பிரமணி. இவா் ரூ.1 லட்சம் செலுத்தினால் மாதம் தோறும் அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.18 ஆயிரம் தருவதாகக் கூறி விளம்பரம் செய்தாா்.

இதை நம்பி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்தவா்கள் முதலீடு செய்தனா்.இதனிடையே பணம் செலுத்தியவா்களுக்கு கூறியபடி பணத்தை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்திற்கு சென்ற முதலீட்டாளா்கள் அங்கிருந்த பாலசுப்பிரமணியத்திடம் பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டனா். அப்போது பாதிக்கப்பட்டவா்களுக்கும், நிதி நிறுவன அலுவலகத்தில் பணிபுரிந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக அழகாபுரம் போலீஸில் 29 போ் புகாா் செய்தனா். இதனிடையே 29 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக பாலசுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT