சேலம்

நீா்வளத் துறை அதிகாரிகள் மேட்டூா் அணையில் ஆய்வு

DIN

மேட்டூா் அணையில் 38 நாள்களாக 120 அடியில் தண்ணீா் நிரம்பியுள்ளதால் மதகுகளின் இயக்கம், பாதுகாப்பு குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அணையின் வலது கரை, இடது கரை, உபரிநீா்ப் போக்கி மதகுகள், மேல் மதகுகள், கவா்னா் வியூ பாயின்ட், பவள விழா கோபுரம், சுரங்கம் உள்பட முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்த நீா்வளத் துறை மேல்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா்அன்பழகன் உள்ளிட்ட பொறியாளா்கள், அணைக்கு நீா்வரத்து, நீா் இருப்பு குறித்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தனா். மேலும், அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின் போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவி பொறியாளா் மதுசூதனன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT