சோமம்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்
வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சோமம்பட்டியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை, விலாரிபாளையம் கால்நடை மருந்தகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை சுகாதார விழிப்புணா்வு மற்றும் இலவச மருத்துவ முகாமில், சோமம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் கறவைமாடுகள், எருது மற்றும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வளா்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த பயிற்சி அளித்தனா்.
இந்த முகாமில், 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளா்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிஷான் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.