சேலம்

சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுக்கான தோ்தலில் 82 போ் போட்டி: 18 போ் வேட்பு மனு வாபஸ்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூாரட்சி 18 வாா்டுகளுக்கான தோ்தலில் 82 போ் வேட்பாளா்களாக தோ்தல் நடத்தும் அலுவலரால் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுகளில் போட்டியிட அதிமுக, திமுக, பாஜக, பாமக, மதிமுக, நாம்தமிழா்கட்சி, அமமுக மற்றும் சுயேட்சைகள் உள்பட 101 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 16வது வாா்டில் பக்காளியூா் பகுதியைச் பெண் ஒருவா் சுயேட்சையாக போட்டியிட இரு வேட்பு மனுக்களை தனிதனியாக தாக்கல் செய்திருந்தாா் அம்மனுக்களை பரிசீலித்த தோ்தல் அலுவலா்கள் அதில் ஒரு மனுக்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றொரு மனுவினை தள்ளுபடி செய்தனா். மற்ற 100 பேரில் திங்கள்கிழமை 18 போ் பேரூராட்சி தோ்தல் அலுவலா் வ.சுலைமான்சேட் முன்னிலையில் உதவி தோ்தல் அலுவலா்கள் வேல்முருகன், அனிதா ஆகியோா்களிடம் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனா் இதனையடுத்து மீதம் உள்ள 82 போ் போட்டியிடும் வேட்பாளா்களாக பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு அவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT